சினிமா செய்திகள்

டாப் கன் மேவ்ரிக்

வசூலை குவித்த டாப் கன் மேவ்ரிக்.. உற்சாகத்தில் படக்குழு

Update: 2022-06-28 12:08 GMT
  • சமீபத்தில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் டாப் கன் மேவ்ரிக்.
  • இந்த படம் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளது.

இயக்குனர் டோனி ஸ்காட் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு டாம் க்ரூஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் டாப் கன். இந்த படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக டாம் க்ரூஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டாப் கன் மேவ்ரிக்'.

சுமார் 170 மில்லியன் டாலர் செலவில் தயாரான இந்தப் படம் தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளது.


டாம் க்ரூஸ்

கோவிட் தாக்கத்திற்குப் பிறகு இந்த வருடத்தில் ஒரு பில்லியன் டாலர் வசூலைப் பெற்ற முதல் ஹாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு டாம் க்ரூஸ் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த 'மிஷன் இம்பாசிபிள் பால் அவுட்' படம் 791 மில்லியன் டாலர் வசூலித்தது. இது தான் டாம் க்ரூஸின் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது. அந்தப் படத்தின் சாதனையை தற்போது 'டாப் கன் மேவ்ரிக்' முறியடித்துள்ளது. 

Tags:    

Similar News