சினிமா செய்திகள்

தி கேரளா ஸ்டோரி

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடை கோரிய மனு.. நீதிமன்றம் உத்தரவு

Published On 2023-05-09 15:52 IST   |   Update On 2023-05-09 15:52:00 IST
  • ‘தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
  • இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.


அப்போது இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்று நீதிபதிகள் கேட்டனர். படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டதாக கபில்சிபல் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Tags:    

Similar News