சினிமா செய்திகள்

வாரிசு - விஜய்

மாஸ் லுக்கில் விஜய்: புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு

Published On 2022-12-04 06:28 GMT   |   Update On 2022-12-04 06:28 GMT
  • வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.
  • ‘வாரிசு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

சிம்பு பாடிய தீ தளபதி பாடல் அறிவிப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

 

வாரிசு படத்தின் புதிய போஸ்டர்

வாரிசு படத்தின் 2வது பாடல் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி (இன்று) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக போஸ்டர் வெயிட்டு படக்குழு தெரிவித்திருந்தது. 2-வது பாடல் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. விஜய் மாஸ் லுக்கில் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News