சினிமா செய்திகள்

'வோயேஜ் எண்ட் யூரோப்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள 2023-ஆம் ஆண்டு காலண்டர்

Published On 2022-12-13 15:42 IST   |   Update On 2022-12-13 15:42:00 IST
  • பிரபல புகைப்பட கலைஞர் எம்.ராம் விக்னேஷின் கைவண்ணத்தில் 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
  • இந்த காலண்டருக்காக சின்னத்திரை நடிகைகளை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பிரபல புகைப்பட கலைஞர் எம்.ராம் விக்னேஷின் கைவண்ணத்தில் சின்னத்திரை நடிகைகளை வைத்து 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் எடுக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது. 'வோயேஜ் எண்ட் யூரோப்' எனும் தலைப்பில் இந்த காலண்டர் சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் வெளியிடப்பட்டது.

இதில் சூரிய ஒளி மற்றும் ஐரோப்பிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு எம்.ராம் விக்னேஷ் காட்சி படுத்தியுள்ளார். இதில் ஹேமா பிந்து, அஷ்வினி சந்திரசேகர், மௌனிகா, பவித்ரா, பிரியங்கா, ஆஷிகா, பாயல், வர்ஷினி வெங்கட், ரியா கணேஷ், அமிஷா, ஸ்ரீ, ரியா ஷர்மா உள்ளிட்ட சின்னத்திரை நட்சத்திரங்கள் தோன்றும் இந்த காலண்டரில் 12 வகையான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்காக கலை இயக்குனர் மணி ஐரோப்பிய பகுதிகளை செட் அமைத்துள்ளார். ஐரோப்பிய நாகரீகத்தை விக்கி கபூர் ஆடை வடிவமைப்பு செய்துள்ளார். ஸ்வாதி, நிவேதா, ப்ரீத்தி ஆகியோர் ஒப்பனை செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காலண்டர் புகைப்படங்களில் இடம்பெற்ற சின்னதிரை நடிகைகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். மேலும் அடுத்த முறை திறந்த வெளியில் வேறொரு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு புதிய திட்டங்களுடன் புகைப்பட காலண்டர் எடுக்க உள்ளதாகவும் எம்.ராம் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News