சினிமா செய்திகள்
சூர்யா - அக்ஷய்குமார்
சூர்யா படம் ரீமேக்.. குழப்பத்தில் படக்குழு
- சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் ரீமேக்கில் பட பெயரை வைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியிருந்த சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தில் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு பெயர் வைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
சூரரைப் போற்று
ஊடகங்கள் ஆளுக்கு ஒரு பெயரை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர். இது பற்றி தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறியதாவது, படத்திற்கு உரிய நாளில் தலைப்பு அறிவிக்கப்படும் அதற்குள் வதந்தியான பெயர்களை கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.