சினிமா செய்திகள்

நானி

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நானி படம்

Update: 2022-08-18 09:59 GMT
  • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
  • இவர் நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார்.


ஷியாம் சிங்கா ராய்

மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


ஷியாம் சிங்கா ராய்

இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News