சினிமா செய்திகள்

ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்.. நேரில் சென்று சுற்றி பார்த்த ரஜினிகாந்த்

Published On 2023-06-08 06:44 GMT   |   Update On 2023-06-08 06:44 GMT
  • ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • இதனை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று சுற்றி பார்த்தார்.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான 'ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்' சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கமல்ஹாசன், திமுக எம்பி டி.ஆர் பாலு, அமைச்சர் கே.பொன்முடி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் சிவகுமார் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த மியூசியம் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மேலும் 1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய சுசுகி ஆர்வி 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த எம்ஜி டிபி கார் மற்றும் 2007ல் வெளியான 'சிவாஜி; தி பாஸ்' படத்தின் கதாபாத்திரமான சிவாஜி சிலை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்த்திற்கு வருகைதந்தார். அதன்பின்னர் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் எம்எஸ்.குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை ரஜினி சுற்றிப் பார்த்தார்.

Tags:    

Similar News