சினிமா செய்திகள்

ராஜமவுலி

'கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம்'.. பாலிவுட் தோல்வி குறித்து ராஜமவுலி விளக்கம்..

Published On 2022-12-14 05:26 GMT   |   Update On 2022-12-14 05:26 GMT
  • ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
  • இவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.


ராஜமவுலி

மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் ராஜமவுலிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.


ராஜமவுலி

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அதிக சம்பளம் தருவதினால் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.

பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு இயக்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையெனில் மூழ்கிவிடுவார்கள்" என்று பேசியுள்ளார்.

Tags:    

Similar News