சினிமா செய்திகள்

பிரபாஸ்

null

ஆதிபுருஷ் இயக்குனர் மீது பிரபாஸ் கோபம்? கலாய்க்கும் நெட்டிசன்கள்

Published On 2022-10-05 08:57 IST   |   Update On 2022-10-05 08:58:00 IST
  • ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
  • சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் கடந்த 2-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆதிபுருஷ் டீசர் சமூக வலைதளங்களில் மிகுந்த கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

 

ஆதிபுருஷ்

இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகுபலி படத்தை கொடுத்த பிரபாஸ் இப்படி ஒரு தரமற்ற படத்தை எடுத்திருக்க கூடாது என கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

 

ஆதிபுருஷ்

சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் இதுகுறித்து படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இதற்கிடையில் பிரபாஸ் கோபப்படுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. கோபத்தில் இயக்குனர் ஓம் ரவுத்தை அவர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வின் வீடியோவில் டீசர் வெளியானதும், கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் இயக்குனரிடம் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

 

கோபத்தில் பிரபாஸ்

பிரபாஸ் கோபமாக இயக்குனர் ஓம் என் அறைக்கு வா என்று கூறுகிறார். பிரபாஸை இவ்வளவு கோபமாக நாங்கள் பார்த்ததில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராமர் பிறந்த அயோத்தியில் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ஆதிபுருஷே ரசிக்கவில்லை என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதிபுருஷ்

 

ஆதிபுருஷ் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், படத்தின் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதால் நெட்டிசன்கள் கோபத்தில் படத்தின் தரத்தை உயர்த்துங்கள் என கூறி வருகின்றனர்.

ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிருத்தி சனூன் சீதையாகவும், சைப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் ந்டித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு 2023ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News