சினிமா செய்திகள்
சல்மான்கான்
சல்மான்கான் பிறந்த நாள்.. ரசிகர்களுக்கு தடியடி..
- இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான்.
- சல்மான் கான் நேற்று தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்தி திரைத்துறையில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சல்மான் கான். இவர் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்து விட்டன. இவர் நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சல்மான்கானை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்
இதையடுத்து நடிகர் சல்மான் கானை பார்க்க மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள். வீட்டின் பால்கனியில் தனது தந்தை சலீம் கானுடன் வந்த சல்மான் கான் ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது, ரசிகர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னே செல்ல முயன்றனர். ரசிகர்களை கட்டுப்படுத்த முடியால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.