விஜய் ஆண்டனி
பிச்சைக்காரன் 2 : ரிலீஸ் தேதியை அறிவித்த விஜய் ஆண்டனி
- நடிகர் விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- சமீபத்தில் இப்படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பிச்சைக்காரன் 2
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகி வைரலானது.
பிச்சைக்காரன் 2 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Do you want to see a mass beggar from Dubai ?
— vijayantony (@vijayantony) February 27, 2023
Visit theaters near you on April 14th?#பிச்சைக்காரன்2 #బిచ్చగాడు2
ANTI BIKILI pic.twitter.com/Qe7MaD5wPQ