சினிமா செய்திகள்

குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்தாரா-விக்னேஷ் சிவன்

Published On 2023-04-03 07:00 GMT   |   Update On 2023-04-03 07:00 GMT
  • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
  • நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் நயன்தாரா வாடகை தாய் மூலம் அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதில் சட்ட ரீதியாக விதிகள் மீறப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இருவரும் செயல்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் அறிக்கை வெளியானது.


குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தைகளின் பெயரை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். அதன்படி உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, N என்பது நயன்தாராவை குறிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.  

Tags:    

Similar News