சினிமா செய்திகள்

நகராதே

கவனம் ஈர்க்கும் நகராதே பாடல்

Update: 2022-06-26 07:18 GMT
  • நிவாஸ் கே.பிரசன்னா, ஸ்வாகதா குரலில் நகராதே பாடல் உருவாகியுள்ளது.
  • பாடலாசிரியர் கு.கார்த்திக் இந்த பாடலை எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகின் பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் பேச்சுலர், ஜோம்பி, நோட்டா, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்பட பல படங்களில் பாடல் பாடியுள்ளார். இவர் இன்ட்ரோ என்ற படத்தில் நடித்தும் வருகிறார்.

நகராதே

தற்போது தொகுப்பாளர் மாதேவுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் ஸ்வாகதா கிருஷ்ணன் பாடி நடித்திருக்கிறார். நகராதே என்று தொடங்கும் இந்த பாடலை நிவாஸ் கே.பிரசன்னாவுடன் இணைந்து ஸ்வாகதா பாடியும் உள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுத, அஷ்வின் ராஜ் இசையமைத்துள்ளார். நாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலை வட்டல் ஸ்டியோஸ் தயாரித்துள்ளது. ஜூன் 24-ஆம் தேதி வெளியான இப்பாடல் இணையத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 


Full View


Tags:    

Similar News