சினிமா செய்திகள்

இதிகாசங்களில் எல்லாம் கொலைதான்- மிஷ்கின் பேச்சு

Published On 2023-07-10 12:06 GMT   |   Update On 2023-07-10 12:06 GMT
  • விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொலை’.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, தற்போது கிரைம் திரில்லர் வகை படமான 'கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.


இதில், இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே என்ன சார் அடுத்து கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள். 'கொலை' என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக இயக்குனர் அவ்வளவு சண்டைப்போட்டிருப்பார். ஒரு நல்ல இயக்குனர் படத்தலைப்பின் எழுத்திற்காக வேலை செய்கிறார்.


கொலை இசை வெளியீட்டு விழா

இந்த எழுத்தின் மூலம் என் ஒட்டுமொத்த படத்தையும் புரிந்து கொள்ள முடியுமா என்று இயக்குனர் யோசிப்பார். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும். அந்த வகையில், இயக்குனர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

Tags:    

Similar News