சினிமா செய்திகள்

"ஐ லவ் யூ" சொல்லி ஷாக் கொடுத்த மாளவிகா மோகனன்

Update: 2022-06-26 04:41 GMT
  • விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
  • இவர் நடித்த மாறன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் ஜாலியாக கலந்து உரையாடுவார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாலியாக பதில் அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனனிடம் ரசிகர் ஒருவர் நடிகர் விஜய்க்கு நீங்க அனுப்பிய லாஸ்ட் மெசேஜ் என்னவென்று எழுப்பிய கேள்விக்கு வீடியோ மூலம் பதிலளித்த மாளவிகா மோகனன் ஹேப்பி பர்த்டே என சொன்னதும் விஜய் ரசிகர்கள் அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

மாளவிகா மோகனன்


மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா நடித்த விக்ரம் படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க என ரசிகர் ஒருவர் கேட்க, விக்ரம் படம் ரொம்பவே புடிக்கும். என்னவொரு காஸ்டிங், என்னவொரு பிஜிஎம் என பாராட்டித் தள்ளி உள்ளார் மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகனன்

ரசிகர் ஒருவர் நடிகை மாளவிகா மோகனனிடம் நைசக நீங்க எனக்கு ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லுங்க.. அதை என் பெட்ரூம்ல பிரேம் போட்டு மாட்டி வைப்பேன் என்று சொன்னதும், உடனடியாக ஐ லவ் யூ சொல்லி அவருக்கு ஷாக் கொடுத்தார். ரசிகர்களுடன் உறையாடிய மாளவிகா மோகனின் பதிவை வைராக்கி வருகின்றனர்.


Tags:    

Similar News