சினிமா செய்திகள்

கார்த்தி

null

கைதி -2 எப்போது? அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..

Update: 2022-08-10 08:35 GMT
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் கைதி.
  • இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான "கைதி" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் "கைதி -2" படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. இதன் பின்னர், கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தில் "கைதி" காட்சிகள் இடம்பெற்றது ரசிகர்கள் மத்தியில் "கைதி -2" படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை எழுப்பியது.


கைதி

இந்நிலையில், "விருமன்" படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் கைதி -2 படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, அடுத்த ஆண்டு "கைதி -2" திரைப்படம் தொடங்கும். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால், அந்த படத்தை முடித்த பின்னர் "கைதி -2" படத்தின் பணிகள் தொடங்கும்" எனக் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தியின் "விருமன்" திரைப்படம் ஆகஸ்ட் -12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News