சினிமா செய்திகள்

சங்கர் - கமல்ஹாசன்

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் கமல்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் சங்கர்..

Published On 2022-09-08 09:15 GMT   |   Update On 2022-09-08 09:16 GMT
  • இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
  • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.


இந்தியன் -2

இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


பொன்னியின் செல்வன்

இதையடுத்து இப்படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் சங்கர் 'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார். அதில், 'இந்தியன் 2' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும், அதில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News