சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலின் - இளையராஜா

null

ஓங்கு புகழோடு வாழ்க.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா..

Published On 2023-02-28 20:05 IST   |   Update On 2023-02-28 20:52:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
  • இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, "தன்னுடைய 70-வது பிறந்தநாள் கொண்டாடும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்"

இவ்வாறு வீடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

Tags:    

Similar News