சினிமா செய்திகள்

மாளவிகா மோகனன்

ரசிகர் பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படம்.. ஹார்ட் கொடுத்த மாளவிகா மோகனன்

Update: 2022-06-30 08:18 GMT
  • விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன்.
  • இவர் நடித்த மாறன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

மாளவிகா மோகனன்

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

மாளவிகா மோகனன்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு "நான் உணர்ச்சி ரீதியாக மாளவிகா மோகனனை சார்ந்து இருக்கிறேன் உயிர் பிழைக்க" என்று பதிவிட்டிருந்தார்.

மாளவிகா மோகனன்

இதற்கு பதிலளித்த மாளவிகா "ஹாஹா அவ்" என்று பதிவிட்டு இரண்டு ஹார்ட் ஈமோஜிகளை குறிப்பிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News