சினிமா செய்திகள்

நீத்து சந்திரா

மனைவியாக வாழ 25 லட்சம் சம்பளம்.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்

Published On 2022-07-15 09:01 IST   |   Update On 2022-07-15 09:01:00 IST
  • ஜெயம் ரவியின் ஆதி பகவன், விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா.
  • சிங்கம் 3, சேட்டை, திலகர் ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகில் பயணிக்க தொடங்கியவர் நடிகை நீத்து சந்திரா. இதன்பின்னர், தமிழில் மாதவன் நடித்த யாவரும் நலம் படம் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் பெற்றார். ஜெயம் ரவியின் ஆதி பகவன், விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சிங்கம் 3, சேட்டை, திலகர் ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

நீத்து சந்திரா

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள நீத்து சந்திரா, சமீபத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும்போது, தேசிய விருது வென்ற 13 பேருடன் மற்றும் பெரிய படங்களில் நான் பணிபுரிந்து இருக்கிறேன். ஆனால், இன்று நான் ஒன்றும் இல்லை. என்னுடைய கதை ஒரு வெற்றி பெற்ற நடிகையின் தோல்வியடைந்த கதை. ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் வந்து, அவருடன் சம்பளத்திற்கு மனைவியாக இருக்க, மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன் என்றார்.

நீத்து சந்திரா

ஒரு பிரபல இயக்குனர், அவருடைய பெயரை வெளியிட நான் விரும்பவில்லை. ஆடிசனுக்கு என்னை கூப்பிட்டு விட்டு ஒரு மணிநேரத்தில் நிராகரித்து விட்டார். என்னை நிராகரிப்பதற்காகவே அவர் ஆடிசனுக்கு அழைத்து உள்ளார். அதனால், எனது நம்பிக்கை உடைந்து போகட்டும் என்ற நோக்கில் அவர் அப்படி செய்துள்ளார் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார்.

நீத்து சந்திரா

நடிகை நீத்து சந்திரா பாலிவுட்டில் 2005-ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தார். நடிகர்கள் அக்சய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாமுடன் கரம் மசாலா என்ற படத்தில் நடிக்க தொடங்கிய அவர், டிராபிக் சிக்னல், 13பி, ஓய் லக்கி! லக்கி ஓய்! மற்றும் ரான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சம்பரான் டாக்கீஸ் என்ற பெயரில் சொந்த படதயாரிப்பு நிறுவனம் தொடங்கி தேஸ்வா மற்றும் மிதிலா மகான் ஆகிய இரு படங்களையும் தயாரித்து உள்ளார். அவரது படங்களில் ஓய் லக்கி! லக்கி ஓய்! மற்றும் மிதிலா மகான் தேசிய விருது வென்றுள்ளன. 2021-ஆம் ஆண்டில், நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற படத்தின் வழியே ஹாலிவுட்டிலும் நீத்து சந்திரா தடம் பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News