சினிமா செய்திகள்

நடிகர் மயில்சாமியின் உடல் தகனம்

Published On 2023-02-20 12:08 IST   |   Update On 2023-02-20 12:08:00 IST
  • மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
  • இவரது உடல் சென்னை வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி, நேற்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது. மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 


சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாதை செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் இவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் இருந்து வடபழனிக்கு இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.



இவரது உடலுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். வடபழனி மின்மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News