சினிமா செய்திகள்

புகழ்-பென்சி

காதலியை கரம் பிடித்தார் குக் வித் கோமாளி புகழ்

Published On 2022-09-01 11:26 IST   |   Update On 2022-09-01 11:26:00 IST
  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.
  • இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அஜித்துடன் வலிமை, சந்தானத்துடன் சபாபதி, அஸ்வினுடன் என்ன சொல்ல போகிறாய், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார்.

 

புகழ்-பென்சி

சமீபத்தில் புகழ் தனது காதலி பென்சி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புகழ்-பென்சியின் திருமணம் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.

 

புகழ்-பென்சி

இந்நிலையில் புகழ்-பென்சியின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகழ்-பென்சி தம்பதிக்கு திரைதுறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News