சினிமா செய்திகள்

பா.ரஞ்சித் - விக்ரம்

null

பா. ரஞ்சித்துடன் மோதும் விக்ரம்.. புதிய அறிவிப்பை வெளியிட்ட கோப்ரா படக்குழு

Update: 2022-08-09 12:53 GMT
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
  • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.


கோப்ரா

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News