சினிமா செய்திகள்

துஷ்யந்த் -ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசன் மகன் மற்றும் பேரன் மீது வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு..

Published On 2023-03-09 12:55 GMT   |   Update On 2023-03-09 12:55 GMT
  • நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனம் ஈஷன் புரொடக்‌ஷன்ஸ்.
  • ஈஷன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் ரூ.4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈஷன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் ரூ.4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

இந்த ரூ.4 கோடி ரூபாய் கடன் தொகையை 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததையடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என். கோவிந்த ராஜை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில் ரூ. 41 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே வட்டியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான நோட்டீசுக்கு முறையாக பதிலளிக்காமலும் சமரச பிரிவு ஒப்பந்தத்தை ஏற்காமலும் ஈசன் நிறுவனம் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மனு தொடர்பாக மார்ச் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஈசன் பட நிறுவனத்திற்கும் துஷ்யந்த் , அபிராமி மற்றும் துஷ்யந்த்தின் தந்தை ராம்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News