சினிமா செய்திகள்

சுற்றுபயணத்தில் அஜித்

null

மீண்டும் சுற்றுப்பயணத்திற்கு திட்டமிடும் அஜித்

Published On 2022-10-18 09:54 IST   |   Update On 2022-10-18 12:54:00 IST
  • சமீபத்தில் அஜித் சுற்றுபயணம் மேற்கொண்டு கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
  • தற்போது அஜித்குமார் 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

 

சுற்றுபயணத்தில் அஜித்

அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை வருடம் மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News