சினிமா செய்திகள்

துணிவு - அஜித்

துணிவு படம் பார்க்க அனுமதிக்காததால் அஜித் ரசிகர் தற்கொலை

Published On 2023-01-20 15:03 IST   |   Update On 2023-01-20 15:03:00 IST
  • தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜீத் ரசிகராக இருந்து வந்ததுள்ளார்.
  • மது அருந்திவிட்டு, துணிவு படம் பார்க்க வந்தபோது, தியேட்டருக்குள் அனுமதிக்காததால், மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த வீரபாகு என்பவர் தீவிர அஜீத் ரசிகராக இருந்து வந்ததுள்ளார். தனது குடும்பத்தினருடன் போல்டன்புரத்தில் உள்ள கே.எஸ்.பி.எஸ். தியேட்டருக்கு, துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.


துணிவு - அஜித்

இதனால் அங்கிருந்த பவுன்சர்கள், வீரபாகுவை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்ததுடன், குடும்பத்தினர் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் குடும்பத்தினரை மட்டும் அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு, அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்து, விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News