சினிமா செய்திகள்
சுசந்திர தாஸ்குப்தா
null
நடிகை சுசந்திர தாஸ்குப்தா சாலை விபத்தில் மரணம்
- பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா.
- இவர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பாராநகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பும் போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பெங்காலி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சுசந்திர தாஸ்குப்தா. இவர் நேற்று மேற்கு வங்க மாநிலம் பாராநகரில் படப்பிடிப்பு முடிந்து பைக் டாக்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சுசந்திர தாஸ்குப்தா மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரது திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.