சினிமா செய்திகள்

தன்னைத் தானே திருமணம் செய்துக் கொண்ட பிரபல சீரியல் நடிகை

Published On 2022-08-20 17:19 IST   |   Update On 2022-08-20 17:19:00 IST
  • இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமாடைந்தவர் கனிஷ்கா சோனி.
  • நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது என்பது சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து என்கிற 24 வயது பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி ஹனிமூன் சென்றும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் கனிஷ்கா சோனி. குறிப்பாக இவர் நடித்த தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நடிகை கனிஷ்கா தற்போது தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

கனிஷ்கா சோனி

சில தினங்களுக்கு முன்னர் கழுத்தில் தாலி மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் வீடியோ வெளியிட்ட அவர் தான் சுயநினைவோடு தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, "தனிமை தான் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் நினைத்தபடி எந்த ஒரு ஆணையும் இதுவரை என் வாழ்நாளில் சந்திக்கவில்லை.

அதனால் தனியாகவே இருக்க முடிவு செய்துவிட்டேன். திருமணம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல அதில் காதல், நேர்மை ஆகியவையும் இருக்க வேண்டும். நான் குடித்துவிட்டு இவ்வாறு சொல்லவில்லை. எனக்கு குடிப்பழக்கமும் கிடையாது" என கூறி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News