சினிமா செய்திகள்

ஹன்சிகா - சோகைல் கதுரியா

ஓடிடியில் வெளியாகும் திருமணம்.. டீசரை பகிர்ந்த ஹன்சிகா..

Published On 2023-01-30 14:45 GMT   |   Update On 2023-01-30 14:45 GMT
  • நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
  • இவரின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவின் திருமணம் 'லவ் ஷாதி டிராமா' என்ற தலைப்பில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Tags:    

Similar News