சினிமா செய்திகள்

அர்னவ் - திவ்யா

null

என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது.. கதறும் நடிகை திவ்யா

Published On 2022-10-12 14:15 IST   |   Update On 2022-10-12 14:45:00 IST
  • சின்னத்திரை நடிகர்கள் அர்னவ்-திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
  • இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர்.

'செவ்வந்தி' என்னும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' தொடரில் நடித்து வரும் நடிகர் அரனவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இருவரும் ஒரே வீட்டில் 2 வருடங்களாக சேர்ந்து வசித்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.

அர்னவ் - திவ்யா

 

சில தினங்களுக்கு முன்பு தனது கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்த நேரத்திலும் தனது கரு கலையலாம் எனவும் கூறி நடிகை திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார்களை அளித்து வருகிறார்.

 

திவ்யா

இந்நிலையில் நடிகர் அர்னவ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்தார். மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜரான பிறகு நடிகை திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, நேற்று முன்தினம் நான் புகார் அளித்திருந்தேன். ஆனால் அதில் நான் கூறியவாறு என்னுடைய புகார்களை அந்த எப்ஐஆர்-இல் அவர்கள் பதிவு செய்யவில்லை. என்னை முஸ்லீம் மதத்திற்கு மாற வைத்து திருமணம் செய்து நான் கர்ப்பம் ஆன பின்பு என்னை அர்னவ் விட்டுவிட்டார்.

திவ்யா

 

ஆனால் எப்ஐஆர்-இல் இதுகுறித்து அவர்கள் குறிப்பிடவில்லை. அதற்காக தான் நான் இங்கு வந்து பல்வேறு தகவல்களை எப்ஐஆர்-இல் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். விரைவில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த பெண்ணிற்கும் என்னை போன்ற நிலைமை வந்துவிடக்கூடாது. எல்லோரும் நீ கணவனுக்கு ஏற்றார்போல் குடும்பத்தை நடத்து என்கிறார்கள். எல்லாம் பெண்களும் இதுபோன்று ஒத்துழைத்து சென்றால் யார் குரல் கொடுப்பது? அதனால் தான் நான் இதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறேன். என் நிலைமை எந்த பெண்ணும் வரக்கூடாது. அர்னவ் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.

Tags:    

Similar News