சினிமா செய்திகள்

அனிகா விக்ரமன்

முன்னாள் காதலனின் கொடூர தாக்குதல்.. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படங்களால் பரபரப்பு..

Published On 2023-03-06 15:54 IST   |   Update On 2023-03-06 15:54:00 IST
  • நடிகை அனிகா விக்ரமன் ‘எங்க பாட்டன் சொத்து’, ‘விஷமக்காரன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான அனிகா விக்ரமன் தமிழில் 'எங்க பாட்டன் சொத்து', 'விஷமக்காரன்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தனது முன்னாள் காதலன் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.


அனிகா விக்ரமன்

இது குறித்து அனிகா விக்ரமன் கூறியிருப்பதாவது, " பல ஆண்டுகளாக அனூப் பிள்ளை மனதளவிலும் உடலளவிலும் என்னை துன்புறுத்தி வந்தார். அவர் என்னை இரண்டாவது முறையாக துன்புறுத்தியபோது, பெங்களூர் போலீசில் புகாரளித்தேன். முதலில் சென்னையில் வைத்து என்னை அடித்தார். அன்று அவர் அழுது புலம்பி கெஞ்சி கேட்டதால் நான் புகாரளிக்கவில்லை. நான் முட்டாளாக இருந்தேன்.


அனிகா விக்ரமன்

இரண்டாவது முறையாக அவர் என்னை அடித்த போது நான்புகாரளித்தேன். ஆனால் அவர் போலீசாரிடம் பணம் கொடுத்து என்னை சிக்க வைத்தார். போலீசார் தன்னுடன் இருப்பதாக நினைத்து அவர் தொடர்ந்து என்னை அடித்து துன்புறுத்தினார். நான் படப்பிடிப்பிற்கு செல்வதை தடுக்க எனது செல்போனை தூக்கி எறியும் அளவிற்கு சென்றார். ஹைதராபாத் செல்வதற்கு முன், எனது போனை ஆப் செய்து விட்டு என்னை உடல் ரீதியாக தாக்கினார்.


அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம்

அவர் என் மேல் ஏறி அமர்ந்தார். வாய் மற்றும் மூக்கில் தாக்கினார். காயம்பட்ட முகத்துடன் எப்படி நடிப்பாய் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி அடித்தார். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் குணமடைய பல நாட்கள் ஆனது. அவனுடைய கொடுமையை என்னால் மன்னிக்க முடியாது. தற்போது நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார். இதையெல்லாம் வெளிப்படையாக எழுதுகிறேன்" என கூறினார்.


Tags:    

Similar News