சினிமா செய்திகள்

அங்காரகன்

மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் நடிகர் சத்யராஜ்

Published On 2022-12-16 10:48 IST   |   Update On 2022-12-16 10:48:00 IST
  • இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’.
  • இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அங்காரகன்'. ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.


அங்காரகன்

இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இதில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அங்காரகன்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். 'அங்காரகன்' 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News