சினிமா செய்திகள்

ரம்யா - சமந்தா

null

ரம்யாவின் புதிய அவதாரம்.. வாழ்த்து தெரிவித்த சமந்தா..

Update: 2022-11-25 14:34 GMT
  • தொகுப்பாளினியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் ரம்யா.
  • இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியான ரம்யா சுப்ரமணியன் தன் பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.


ரம்யா எழுதிய புத்தகம்

இந்நிலையில், இவர் தற்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.Tags:    

Similar News