சினிமா செய்திகள்

கமல்

தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை - நடிகர் கமல்

Published On 2022-09-04 04:21 GMT   |   Update On 2022-09-04 04:21 GMT
  • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு".
  • இப்படத்தின் வெற்றி விழாவில், சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்கவேண்டும் என்று கமல் பேசினார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ''வெந்து தணிந்தது காடு". வேல்ஸ் இண்டர் நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

 

வெந்து தணிந்தது காடு

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது, ''வெந்து தணிந்தது காடு என்பது பாரதியாரின் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ''தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ". அதுபோல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், என்னை தந்தை போல் என்பார்.

 

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

அவருக்கு, நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட்டது இல்லை. தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.

 

வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழா

வேட்டையாடு விளையாடு 2-ம் பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்துவிட்டது. வேல்ஸ் பிலிம்சில் படம் செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் 'மிஸ்' செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என்று கமல் பேசினார்.

Tags:    

Similar News