சினிமா செய்திகள்

ஆஷிஷ் வித்யார்த்தி

null

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கில்லி பட நடிகர்

Published On 2023-05-25 20:31 IST   |   Update On 2023-05-25 21:00:00 IST
  • வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.
  • இவர் 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.

பிரபல நடிகராக வலம் வரும் ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, தில், தமிழன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 1995-ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ளார்.


இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி

இவர் முதலாவதாக நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார். இவர் முன்னாள் நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.


இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி

இந்த தம்பதியினர் இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News