சினிமா செய்திகள்

பார்க் சூரியுன்

மூளைச்சாவு அடைந்த 29 வயது நடிகை- உடல் உறுப்புகள் தானம்

Published On 2023-06-13 13:16 IST   |   Update On 2023-06-13 13:16:00 IST
  • 2018-ம் ஆண்டு ஒரு இசை ஆல்பம் மூலம் அறிமுகமானார் பிரபல நடிகை பார்க் சூரியுன்.
  • இவர் தற்போது பிரபல டி.வி. தொடரான ஸ்னோ டிராப்பில் நடித்து வந்தார்.

தென் கொரியாவை சேர்ந்த பிரபல நடிகை பார்க் சூரியுன் (வயது29). இவர் 2018-ம் ஆண்டு ஒரு இசை ஆல்பம் மூலம் அறிமுகமானார். அதன்பின் டி.வி. தொடர், இசை ஆல்பங்களில் நடித்தார். தற்போது பிரபல டி.வி. தொடரான ஸ்னோ டிராப்பில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் பார்க் சூரியுன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு விமானத்தில் தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது விமானத்தில் இருந்து கீழே இறங்கிய போது படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கு பலன் அளிக்கவில்லை. பார்க் சூ ரியுன், மூளைச் சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதுகுறித்து பார்க் சூரியுனின் தாய் சூம்பி கூறும் போது, "எனது மகளின் மூளை மட்டும் சுயநினைவின்றி இருக்கிறது. அவரது இதயம் இன்னும் துடிக்கிறது. ஒரு தாய், தந்தையாக அவளது இதயம் யாரோ ஒருவரிடம் சென்று துடிக்கிறது என்ற எண்ணத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்" என்றார்.

Tags:    

Similar News