சினிமா செய்திகள்

பார்த்திபன்

null

இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பார்த்திபன்

Published On 2023-04-19 08:59 IST   |   Update On 2023-04-19 14:14:00 IST
  • இயக்குனர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன்.
  • இவர் தற்போது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

1989ம் ஆண்டு புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான பொண்டாட்டி தேவை, ஹவுஸ் ஃபுல், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர்.


பார்த்திபன்

இவர் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


பார்த்திபன்

இந்நிலையில் பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், 'நிழல் தேடும் நெஞ்சங்கள்'என்ற படத்தில் நடிகர் பானுசந்தருக்கு பார்த்திபன் டப்பிங் கொடுத்த வீடியோவை பகிர்ந்து, இந்தக் குரல் யாரெனத் தெரிகிறதா? என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி பதில் பதிவிட செய்துள்ளது.

Tags:    

Similar News