சினிமா செய்திகள்

'ழகரம்'- மேலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா

Published On 2025-09-30 14:15 IST   |   Update On 2025-09-30 14:15:00 IST
  • ‘கருப்பு’ படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது.
  • ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா உடன் த்ரிஷா, நட்டி, சுவாஷிகா, யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். 'கருப்பு' படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா புதியதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'ழகரம்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜித்து மாதவனின் படமும், இரண்டாவது படமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் படமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யா 2 டி எண்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News