சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் கொகைன் பயன்படுத்தும் பிரபலங்கள்- பாடகி சுசித்ரா பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2025-06-28 09:30 IST   |   Update On 2025-06-28 09:30:00 IST
  • ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லை.
  • சென்னையில் பல இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடக்கிறது.

போதைப்பொருள் வழக்கில் முன்னணி நடிகர்களான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னணி நடிகர் - நடிகைகள் பலரும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கிறார்களாம்.

இதற்கிடையில் தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் கொகைன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பகீர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சுசித்ரா மேலும் கூறும்போது, "ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தாண்டி தமிழ் சினிமாவில் பலரும் கொகைன் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள். சினிமாவை பொறுத்தவரை போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் யாருமே ரத்த பரிசோதனைக்கு முன்வர மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை நடந்ததாக தெரியவில்லை.

வட மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம், போதைப்பொருள் கலாசாரம் தமிழ் சினிமாவுக்குள் வந்துவிட்டது. பப்புகள், ஓட்டல்கள் என சென்னையில் பல இடங்களில் போதைப்பொருள் பயன்பாடு சர்வ சாதாரணமாக நடக்கிறது. மது விருந்துகளில் நடிகர்-நடிகைகள் சர்வ சாதாரணமாக கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. கொகைன் பயன்படுத்தும் வாய்ப்பு எனக்கும் வந்தது. ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன்", என்றார்.

சுசித்ராவின் இந்த கருத்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News