சினிமா செய்திகள்

ரன்வீர் சிங்கிற்கு ரொமான்டிக் ஹீரோயினான சாரா அர்ஜூன்

Published On 2025-12-02 13:23 IST   |   Update On 2025-12-02 13:23:00 IST
  • சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  • ‘துரந்தர்’ படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் சாரா அர்ஜூன். மும்பையில் பிறந்த இவர் கடந்த 2011-ம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் சாரா அர்ஜூன்.

'தெய்வத் திருமகள்' திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம்வயது நந்தினியாக ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா என பெரிய நட்சத்திர நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள 'துரந்தர்' படத்தில் சாரா அர்ஜூன் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 5-ந்தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் மும்பையில் இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் சாரா அர்ஜூனும் இவ்விழாவில் கலந்து கொண்டார். சாரா அர்ஜூன் விழாவில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


'துரந்தர்' படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் 40 வயதான ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக சாரா அர்ஜூன் நடித்துள்ளார். அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சாரா அர்ஜூனுக்கு 20 வயது தான். தன்னை விட 20 வயது மூத்த பாலிவுட் நடிகருடன் அவர் நடித்துள்ளார். இந்தப் படம் அவரது திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

Tags:    

Similar News