சினிமா செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில் 'குட் நியூஸ்' சொன்ன சமந்தா

Published On 2026-01-08 08:23 IST   |   Update On 2026-01-08 08:23:00 IST
  • 3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது படத்தின் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
  • ‘சுபம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, பல்வேறு பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் கடந்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பட தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். கடந்த மாதம் இயக்குனர் ராஜ் நிடிமொருவை, கோவையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார் சமந்தா. அதன்பிறகு தேனிலவு கொண்டாட்டங்கள் முடிந்தநிலையில் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.

இதற்கிடையில் ரசிகர்களுக்கு அவர் குட் நியூஸ் கொடுத்துள்ளார். அதாவது அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக போகிறது என்பது தானாம் அது. 3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது படத்தின் அறிவிப்பு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதேவேளை பலரும் 'நாங்க வேற குட் நியூஸ் எதிர்பார்த்தோமே...' என்றும் சமூக வலைத்தளங்களில் 'கமெண்ட்' அடித்து வருகிறார்கள்.

 

சமந்தா கடைசியாக 'குஷி' (2023) என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் 'சுபம்' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் தலைகாட்டியிருந்தார்.

Tags:    

Similar News