சினிமா செய்திகள்

புதுச்சேரி தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் நடிகை சாய் தன்ஷிகா சாமி தரிசனம்

Published On 2025-11-25 12:40 IST   |   Update On 2025-11-25 12:40:00 IST
  • மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
  • கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

புதுச்சேரி ஏம்பலம் அருகே தமிழக பகுதியான தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் எனப்படும் அழகு முத்தையனார் கோவில் உள்ளது.

இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக சிலை வைத்து வழிபட்டால் குழந்தைபேறு மற்றும் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

இந்நிலையில் நடிகர் விஷாலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை சாய் தன்ஷிகா தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

நடிகை சாய் தன்ஷிகாவை கண்ட பக்தர்கள் அவருடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Tags:    

Similar News