சினிமா செய்திகள்

சொகுசு பங்களாவிற்கு 10 மாதம் EMI கட்டாத ரவி மோகன்?

Published On 2025-08-25 13:52 IST   |   Update On 2025-08-25 13:52:00 IST
  • நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.

மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்து வந்தது அந்த பங்களாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

EMI கட்டாததால் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடப்பட்டது. ஆனால் அதனை வாங்க ரவி மோகன் தரப்பு  மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது படத்திற்கு ஒப்பந்தம் செய்து 6 கோடி ரூபாய் முன் பணம் வாங்கியும் படத்திற்கு நடிக்க வராமல் கால் ஷீட் கொடுக்காமல் இருக்கிறார் என அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News