சினிமா செய்திகள்

விவாகரத்து வழக்கு: விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ரவி மோகன் - ஆர்த்தி

Published On 2025-05-21 12:10 IST   |   Update On 2025-05-21 12:10:00 IST
  • மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு இருந்தது.
  • பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மூன்று முறை மத்தியஸ்தம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நடிகர் ரவி மோகன்-ஆர்த்தி இருவரும் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 12-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

விவாகரத்து தொடர்பாக ஒருவர் மீது ஒருவர் குறைகூறி மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News