சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் `பேட்ட' பட வில்லன் நடிகரின் மனக்குமுறல்!

Published On 2024-06-30 08:03 IST   |   Update On 2024-06-30 08:03:00 IST
  • திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்.
  • எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன.

பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவர் ஆலியா என்பவரை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ஆலியா மீது நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைந்தனர். 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் 'திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும்' என்று நடிகர் நவாசுதீன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, "திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News