சினிமா செய்திகள்
null

விஷ்ணு மஞ்சு நடித்த கண்ணப்பா படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்

Published On 2025-06-16 17:28 IST   |   Update On 2025-06-16 17:36:00 IST
  • முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது.
  • திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாகிறது.

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகியுள்ளது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. இப்படத்தில் இந்திய திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களான மது , சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இவர்களோடு மேலும், மோகன்லால், பிரபாஸ், அக்ஷய் குமார் மற்றும் காஜல் அகர்வால் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டது. மிகவும் பிரம்மாண்டமாக காட்சிகளை கொண்டு டிரெய்லர் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டினார். அப்பொழுது ரஜினியும் மோகன்பாபுவும் இணைந்து கேக் வெட்டினர் . அதன் புகைப்படங்கள தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News