சினிமா செய்திகள்

பூரி ஜெகநாத் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

Published On 2025-07-07 13:46 IST   |   Update On 2025-07-07 13:46:00 IST
  • பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார்.
  • விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.ப

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார்.

படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.படத்தின் படப்பிடிப்பு பணி இன்று ஐதராபாத் உள்ள செட்டில் தொடங்கியது. தொடர்ந்து சில வாரங்களுக்கு அங்கு படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

Tags:    

Similar News