கிருஷ்ணம் ராஜூ குடும்பத்தினருடன் பிரதமர் மோடி
தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
- கிருஷ்ணம் ராஜூ, எம்.பியாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
- தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ (வயது 83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தெலுங்கு திரையுலகில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
யு.வி. கிருஷ்ணம் ராஜுவின் மறைவை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். திரைப்படத்துறை சம்பந்தமான அவரது அறிவுக்கூர்மை மற்றும் படைப்பாற்றலை எதிர்கால தலைமுறை என்றும் நினைவில் கொள்ளும். சமூக சேவையில் முன்னோடியாக இருந்ததோடு, அரசியல் தலைவராகவும் அவர் தடம் பதித்தார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.