சினிமா செய்திகள்

பஹல்காம் தாக்குதல்: இனி இப்படி ஒரு துயரம் நடக்கக்கூடாது- நடிகர் சூர்யா வேதனை

Published On 2025-04-23 20:12 IST   |   Update On 2025-04-23 20:12:00 IST
  • பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • உலக நாடுகள் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பஹல்காம் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியில் மனமுடைந்து போனேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறேன்.

இனி யாருக்கும் இப்படியான துயரம் நடக்கக்கடாது. இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News