சினிமா செய்திகள்
null

ராஜமௌலியின் 'Globetrotter' திருப்புமுனையாக இருக்கும்: பிரியங்கா சோப்ரா நம்பிக்கை

Published On 2025-11-12 19:56 IST   |   Update On 2025-11-12 20:21:00 IST
மகேஷ் பாபு கதாநாயகனாகவும், பிரித்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

எஸ்.எஸ். ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் (கும்பா கதாபாத்திரம்) வில்லனாக நடிக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார்.

இப்படத்தின் நிகழ்ச்சி வருகிற 15-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு Globetrotter எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் பெயர் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் எக்ஸ் வலைத்தளம் பிரியங்கா சோப்ராவிடம், ரசிகர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அளித்தார்.

ரசிகர் ஒருவர் "இந்த படம் மீண்டும் இந்திய படங்களுக்கு திரும்புவதற்கானதாக இருக்குமா? அல்லது பிரியங்கா சோப்ராவின் ஒட்டுமொத்த புதிய அத்தியாயமாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவிற்கு நான் திரும்புவது மற்றும் புதிய அத்தியாயமாக இருக்கும் என நம்புகிறோம். உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நம்ப முடியாததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும்" என்றார்.

மற்றொரு ரசிகர் "இந்திய சினிமாவில் உங்களை பார்ப்பதை தவறி விடுகிறோம். இந்த படம் உங்களுடைய புதிய தொடக்கத்திற்கான இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு "கடவுள் அருளால். உலகம் முழுவதும் என்னால் முடிந்த சிறந்த வேலையைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுடன் எதுவும் சாத்தியம் என்று தோன்றுகிறது" எனப் பதில் அளித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் உங்களுடைய அனுபவம் பற்றி சொல்லுங்கள் என இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, "இந்த படத்தில் ஆரம்ப கட்டத்தில்தான இருக்கிறேன். இருந்தாலும், சூப்பர். மேலும், ஐதராபாத் பிரியாணி உலகத்திலேயே சிறந்தது" என்றார்.

Tags:    

Similar News